மானாமதுரை சரக டிஎஸ்பி உட்பட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், கொலை செய்யப்பட்டார். இதில், மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய நால்வரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பிப்ரவரி 25ஆம் தேதி மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி