மதுரையில் 135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

மதுரை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். அறுவடை காலங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த நிலையங்கள் செயல்படும். தனியார் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதைத் தவிர்த்து, அரசு நிர்ணயித்துள்ள கூடுதல் விலையைப் பெற்று விவசாயிகள் பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார். நெல்லின் ஈரப்பதம் குறித்து அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலையில் நெல்லை விற்கலாம்.

தொடர்புடைய செய்தி