ஆனால் அதே பொதும்பு ஊராட்சியில் உள்ள அகல்யா வீதி என்ற பகுதியில் 13. 5லட்சம் மதிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சாலைகள் அமைப்பதற்கான ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. அதோடு அவ்வளவுதான் தற்போதுவரை 5 மாதம் கடந்த நிலையிலும் தார் ஊற்றி சாலையை அமைக்காமல் அப்படியே விட்டுசென்றுள்ளனர். பொதுமக்கள்
எங்களது சாலையை கண்டுபிடிப்போம் என்று அவ்வப்போது சாலைக்கு வந்து எட்டி எட்டி பார்த்து ஏமாற்றத்துடன் நிற்கின்றனர் குடியிருப்புவாசிகள்.
பிப்ரவரி மாதம் போட்ட ரோட்ட காணாமேனு அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டால் நாளை நாளை என காரணம் கூறியே 5 மாதம் கடத்திவிட்டனர் எனவும், இதன் உச்சக்கட்டமாக பெய்யாத மழையை காரணம் காட்டி சாலை போட முடியவில்லை என அதிகாரிகளுக்குள்ளேயே காரணம் சொல்லமுடியாமல் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரோடு போட்டு 5 மாதம் ஆன நிலையில் அதில் ரோடு ரோலரும், JCB மட்டுமே செல்ல பயன்படும் அளவிற்கு இருப்பதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.