மதுரை: லாரி மோதியதில் வாலிபர் பலி

கோவை தென்னம்பாளையத்தில் ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆத்தூரைச் சேர்ந்த மகேந்திரன்(25), நேற்று (ஏப். 8) கோவையிலிருந்து இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் புறப்பட்டார். வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் - மதுரை நான்கு வழி சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி