மதுரை: சாலை விபத்தில் பெண் பலி

திருவேடகத்தைச் சேர்ந்த ஜெகந்நாத பாண்டியன் (33) தனது மனைவி செருவம்மாளுடன் (21) உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை மாலை ஊருக்குத் திரும்பியபோது, அலங்காநல்லூர்-வாடிப்பட்டி சாலை கொண்டையம்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஜெகந்நாத பாண்டியன், செருவம்மாள், மணிகண்டன், நிதிஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செருவம்மாள் உயிரிழந்தார். மற்ற மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி