மதுரை சோழவந்தானில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மூலம், அதிமுக ஆலமரம் காப்பாற்றப்பட வேண்டுமானால் சசிகலா தலைமையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சசிகலா தலைமையில் ஒன்றிணைந்து அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கண்ணன், ராஜாராம், மணி, சதீஷ்குமார், பாலகுமார், பூபதி, கணேசன், மூர்த்தி ஆகியோர் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.