வாடிப்பட்டி: 30 பவுன் நகையுடன் பள்ளி மாணவி மாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி சொசைட்டி தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரின் 17 வயது மகள் பதினொன்றாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். இவரது பெற்றோர் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் நேற்று (ஜூன் 9) காலை 10 மணி அளவில் வீட்டிலிருந்து 2 லட்சம் ரூபாய் மற்றும் 30 நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை நேற்று மாலை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்துடன் சென்றுள்ள இளம் பெண்ணைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி