நேற்று (டிச. 21) தனது வீட்டின் முன்பாக ஞானசேகரன் செல்போன் பேசிக்கொண்டிருந்த போது இராமையன்பட்டி அயோத்தி என்பவரின் கல்குவாரியில் டிரைவராக வேலை பார்க்கும் முருகன் இரும்பு கம்பியுடன் வந்து ஞானசேகரனை சரமாரியாக தாக்கி ஆபாசமான வார்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தப்பி விட்டார். இதில் படுகாயமடைந்த ஞானசேகரன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
மதுரை சோழவந்தான் தொகுதிக்கு 3 பேர் போட்டி.. அதிமுகவில் யாருக்கு சீட்டு?