வாடிப்பட்டி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய திமுக

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூரில் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு வாடிப்பட்டி அருகில் உள்ள அன்பே கடவுள் மறுவாழ்வு இல்லம் மாதா கோவில் எதிரில் உள்ள மறுவாழ்வு இல்லத்திலும் மற்றும் பொதுமக்களுக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மற்றும் சேர்மன் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், இரண்டாவது வார்டு கண்ணன், கார்த்திகா, ராணி,  நல்லம்மாள் முன்னிலை வைத்தனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சந்தோஷ், சோழவந்தான் தொகுதி தொழில்நுட்ப அணி அரவிந்த் தவ சதீஷ்குமார், கழக நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி