பட்டியை சேர்ந்தவர் சந்தன கருப்பு ( 30) இவரது மனைவி கிருஷ்ணவேணி (27) இவர்களுக்கு கேசவன் (4) ரோஷன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இரு வரும் கட்டிட தொழிலாளர்கள். இந்நிலையில் நேற்று (மார்ச். 15) மாலை வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி கழிவு நீர் பள்ளத்தில் தவறி விழுந்தனர்.
இந்த தகவல் அறிந்த உறவினர்கள் கேசவன் ரோஷன் இருவரையும் மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
இதில் கேசவன் பரிதாபமாக உயிரிழந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரோஷன் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.