மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் தனது 11 வயது மகனுடன் இன்று (பிப். 7) காலை சமயநல்லூர் - சோழவந்தான் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே குடிபோதையில் வந்த மூன்று பேர் மோதியதில் தந்தை-மகன் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.