சோழவந்தான் அருகே சங்கங்கோட்டையைச் சேர்ந்த பெரியமருது (25) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் தொழில் செய்து வந்த இவருக்கு, மனைவி காளீஸ்வரி உள்ளார். வீட்டில் தூங்கச் சென்றவர் மறுநாள் காலை வரை வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சோழவந்தான் போலீசார் உடலை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.