மதுரை: டிராக்டர் டிரைவர் மர்ம மரணம்

மதுரை மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டியில் மே 13 அன்று, முல்லை பெரியார் பாசனக் கால்வாய் கரையோரம் வைரமணி (46) என்ற டிராக்டர் டிரைவர், முகம் சிதைந்த நிலையிலும் தலையில் பலத்த காயங்களுடனும் இறந்து கிடந்தார். வாடிப்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு, இது விபத்தா அல்லது கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த வைரமணிக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி