மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் குவிந்த மாலைகள் மற்றும் குப்பைகளை சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், பேரூராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் இணைந்து இன்று (மே 27) சுத்தம் செய்தனர். இன்று மாலை பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.