மதுரை: கோயில் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆறு துர்க்கை அம்மன் கோயில் அருகே 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவேடகம் கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் அளித்த புகாரின் பேரில், சோழவந்தான் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி