மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா தேர்தலின் போது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று விஜய் முதல்வராக வேண்டும் என்று வேண்டுதல் வைத்தார். தேர்தலில் வென்று விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று (மே. 17)ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விழா முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது தனது வேண்டுதல் நிறைவேற்ற சோழவந்தான் நகரி சாலையில் ஆலங்கொட்டாரத்தில் உள்ள ஒரு கிணற்றில் இறங்கி தமிழக வெற்றிக் கழக கொடியுடன் மிதந்தபடி ஜல பிரதட்சணம் செய்தார்.