மதுரை: போக்சோ வழக்கில் தவெக நிர்வாகி கைது

மதுரை மாவட்டம் கீழமாத்தூரை சேர்ந்த தவெக பிரமுகர் கண்ணன் (21) பெயிண்டராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் (மே. 23) நள்ளிரவில் கீழ மாத்தூர் கிராமத்தில் கண்ணன் வீட்டிற்குள்ளே தூங்கி கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்தபோது அங்கிருந்து கண்ணன் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து நேற்று (மே. 24 ) கண்ணனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி