மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப். 9 அன்று மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். தடுக்கச் சென்ற ஆசிரியர்களையும் மாணவர்கள் தாக்கியுள்ளனர். தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தி மாணவர்களை எச்சரித்து அனுப்பிய நிலையில், பிப்.10 அன்று மாணவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.