பாலமேடு: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே எர்ரம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கண்ணன் (23) என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், நேற்று முன்தினம் இரவு (பிப். 20) தந்தை கண்டித்ததால் மனமுடைந்துள்ளார். காலையில் வெகுநேரமாகியும் கதவு திறக்காததால், வீட்டிலிருந்தோர் கதவை திறந்து பார்த்தபோது கண்ணன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி