மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ரவுடி பிசிறு என்ற பிரபு (31) நேற்று முன்தினம் (பிப். 12) இரவு மது அருந்த பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மனைவி பணம் தர மறுத்ததால், வீட்டில் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு மீது கொலை, கூட்டு பாலியல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமயநல்லூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.