மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுரத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், கோயில் அருகிலேயே தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த அம்மன், விநாயகர், முருகன் சிலைகள் இருந்த குடிசைக்கு நேற்று (மார்ச். 2) அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் சிலைகள் கருகி, ஆவணங்கள் எரிந்தன. வாடிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.