மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங் கோட்டை பகுதியில் முத்தையா என்பவரது வீட்டில் இன்று (பிப். 8) அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. திடீர் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, மதில் சுவரில் குண்டு வீசப்பட்டதற்கான அடையாளங்களும், ஜன்னல் வழியாக வீசப்பட்ட குண்டு கதவில் பட்டு லேசான சேதமும் ஏற்பட்டிருந்தது. அதிகாலை என்பதால் குற்றவாளிகள் யார் எனத் தெரியவில்லை. இதுகுறித்து சோழவந்தான் போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.