மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் நான்காம் நாளான நேற்று (மே 21) மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கமலாசனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.