மதுரை மாவட்டம் சமயநல்லுார் காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர், குற்றத் தடுப்பு ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பேருந்து நிறுத்தம் அருகே சாக்கு மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்ட 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த மதுபாட்டில்களை கடத்தியதாக சோழவந்தான் அடுத்த கீழமட்டையானையைச் சேர்ந்த அரவிந்த் (29) மற்றும் விஜயகுமார் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.