மதுரை, மே 19 - டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குதல், பணி நேரத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பு மதுரை டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் செவ்வாயன்று மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தது. மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் கடைகள் மூடப்படுவதில் 500 மீட்டர் விதிமுறைகள் சரிவர ஆய்வு செய்யப்படாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டினார்.