மதுரை: அதிமுக எழுச்சி பெற தற்கொலை: மகேந்திரனுக்கு அஞ்சலி

கும்பகோணத்தைச் சேர்ந்த மகேந்திரன்,அதிமுக மீண்டும் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கில் தற்கொலை செய்து கொண்டதற்கு மதுரை அதிமுக மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, மகேந்திரனின் தற்கொலையை படிப்பினையாகக் கொண்டு கழக நிர்வாகிகள் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும். மகேந்திரனின் வீர மரணம் அதிமுகவின் இறுதி மரணமாக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை எழுச்சி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி