மதுரை: பாலியல் தொல்லை; தற்கொலைக்கு முயன்ற சிறுமி

மதுரை அலங்காநல்லூர் அருகே, 24 வயது சங்கிலி கருப்பு என்பவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். சிறுமி கதவை பூட்டிக்கொண்டபோதும், அவர் ஜன்னல் வழியாக சைகை காட்டி, கல் எறிந்து தொந்தரவு செய்துள்ளார். இதனால் பயந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றபோது, பெற்றோர் வந்து மீட்டனர். சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சங்கிலி கருப்பை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி