மதுரை: புது பெண் மர்ம மரணம்; போலீஸ் விசாரணை

மதுரை வாடிப்பட்டி சாணம்பட்டியைச் சேர்ந்த தங்கச்சாமியின் மகன் பிரேம்குமார் (25) தனியார் மில் ஊழியர். இவருக்கும் திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அய்யங்கோட்டை புதுார் ஞானவேல் மகள் ரூபினி தேவிக்கும் (23) இரு மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது. நேற்று (நவ.6) மாலை, ரூபினி தேவி வீட்டின் மாடியில் துணி காயப்போட சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ரூபினி தேவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர், உறவினர்கள் மதுரை-திண்டுக்கல் சாலையில் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி