மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த கதிரேசன் (35) என்பவர் தனியார் நிறுவனத்தின் பெயின்டராக பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள 2 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் சமயநல்லூர் மகளிர் காவல் நிலைய போலீசார் இவரை போக்சோவில் கைது செய்தனர்.