தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி - ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், ஐதராபாத் செல்லும் சிறப்பு ரயில் ஆகியவை வருகிற 7, 14, 21, 28 மற்றும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மேலும், குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில் வருகிற 4 முதல் 29 ஆம் தேதி வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.