மதுரை: திமுகவின் தேர்தல் பயம்; ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், திமுகவின் தோல்வி பயம் மற்றும் கூட்டணிப் பிரச்சினைகள் காரணமாக மகளிர் உரிமைத் தொகை 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டினார். முன்கூட்டியே உரிமைத் தொகை வழங்க சட்டமன்றத்தில் நிதி கொள்கையில் பரிந்துரை பெற்றிருக்க வேண்டும் என்றும், தேர்தலுக்காகவே இந்த அறிவிப்பு என்றும் அவர் கூறினார். திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி