மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் வாராந்திர சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள், கோழிகள் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக நடைபெற்றது. நேற்று நடந்த சந்தையில் 10 முதல் 15 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரையிலும், நாட்டுக்கோழிகள் ரூ. 700 முதல் ரூ. 1500 வரை விற்பனையாகின. இதன் மூலம் மொத்தம் ரூ. 2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதனால் கிராமப்புறங்களில் ஆடு, கோழி வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.