மதுரை: குடும்ப தகராறில் 2 பேர் காயம்

மதுரை அருகே பரவை சாமிநாதன் நகரில், மதுபோதையில் மனைவியை சந்தேகப்பட்டு தகராறு செய்த கணவர் கார்த்திகேயன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளார். இதை அறிந்த மனைவியின் சகோதரர் முத்துக்குமார், இரும்பு கம்பியால் கார்த்திகேயனைத் தாக்கியுள்ளார். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் மே 4 இரவு நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி