கோவிலில் பின்னர் உள்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பொதுமக்கள் பக்தர்கள் பெண்கள் பக்திபரவசத்தில் சாமி ஆடினார்கள். திருவிழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
வருகின்ற 10ஆம் தேதி காலை பால்குடம் மாலை அக்னிசட்டியும் 11ஆம் தேதி மாலை 5 மணிஅளவில் மந்தைகளத்தில் பூக்குழியும் 17ஆம் தேதி காலை திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் 18ம்தேதி இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நேற்று கொடியேற்றியவுடன் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர்.