சோழவந்தான் அருகே ஜீவானந்தம் (52) என்பவருக்குச் சொந்தமான சுந்தரபாண்டியன் பேங்கர்ஸ் என்ற நகை அடகு கடையில் 300க்கும் மேற்பட்டோர் நகை அடகு வைத்திருந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவானந்தம் தலைமறைவான நிலையில், பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அவரது தாய் ஜானகி (75) என்பவரை பொங்கல் பரிசு வாங்க வந்தபோது முற்றுகையிட்டு சண்டையிட்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.