பல்வேறு தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை வரும் தமிழக முதல்வரிடம் டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் கேட்டு மனு கொடுக்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்திருந்த நிலையில் இதனை அறிந்துகொண்ட காவல்துறையினர் அவரை நேற்று (மே 31) வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
இதனால் அங்கு வந்த தவமணியின் ஆதரவாளர்கள் தவமணி வீட்டின் முன்பு கூடி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். உடனடியாக டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரிக்கையும் விடுத்தனர்.