சோழவந்தான்: பயணியின் காலில் ஏறிய நகரப் பேருந்து பரபரப்பு

மதுரை சோழவந்தான் பேட்டை பகுதியைச் சேர்ந்த உமா என்பவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து காத்திருந்ததாகத் தெரிகிறது. மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சோழவந்தான் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர் பேருந்து நிலையத்திற்குள் வரும்போது நடைமேடையில் பெண் பயணி அமர்ந்திருந்ததைக் கவனிக்காமல் நடைமேடை அருகில் பேருந்தை நிறுத்துவதற்காகக் கொண்டு சென்றுள்ளார். 

அப்போது நடைமேடையில் இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்திருந்த உமாவின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதாகத் தெரிகிறது. இதனால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பெண் பயணி உமா வலியால் துடித்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

சோழவந்தான் பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தற்போது பயணிகளின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி