தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் இன்று (மார்ச். 14) விநியோகிக்கப்பட்டது. இதில் மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழழகன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், முன்னாள் எம்எல்ஏ எம். வி கருப்பையா, முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, அம்மா பேரவை வெற்றிவேல் துரை, தன்ராஜ் பேரூர் செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், அவைத்தலைவர் முசி சோ முருகன், இளைஞர் அணி கேபிள் மணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா, ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், தியாகு பத்தாவது வார்டு மணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.