சோழவந்தான்: ஜெனகை மாரியம்மனுக்கு அபிஷேகம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் உறவினர் சார்பாக 500க்கும் மேற்பட்ட பெண்கள் வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்கள்.

அதனை தொடர்ந்து, ஜெனகை மாரியம்மனுக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழிபாட்டில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவு உண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி