சோழவந்தான்: இரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

மதுரையை அடுத்த வாடிப்பட்டி ரோடு கொடை ரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் (பிப். 27) சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்துள்ளார். அவரது தலை மற்றும் உடல் பகுதியில் ரத்தக் காயங்கள் காணப்பட்டன.

இதுபற்றி தகவலறிந்த குலசேகரன் கோட்ட கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கருப் பன் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் அந்த இடத் துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் விசாரணையில் அந்த வாலிபர் ரெயிலில்
அடிபட்டு தெரியவந்தது. இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என்று விவரம் அறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி