மதுரை மாவட்டம் சோழவந்தான் தெற்கு ரத வீதி, மேலரத வீதி பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த அறிவிப்பில் மேல ரத வீதி, தெற்கு ரத வீதிகளில் இன்று (ஜூன் 6) இரவு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் அதற்கு இடையூறு இல்லாமல் தங்கள் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி கொள்ளுமாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.