இந்த முகாமில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வரவேற்றார்.
இந்த முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வாழ்வாதார கடன் உதவிகள், காவல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பேரிடர் துறை, துறை, வருவாய் மேலாண்மை துறை, போன்ற பல்வேறு துறைகளின் அரங்குகள் இருந்தன.
இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.