அலங்காநல்லூர்: இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடை அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 10. 5% இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (டிச. 24) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிட்டு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் மெய்யப்பன்பட்டி முருகன், மாவட்ட துணை தலைவர் பிரபு, அழகுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ராஜாராம், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி