மதுரை: அதிவேகத்தில் வந்த லாரி பைக் மீது மோதல்

வாடிப்பட்டி அருகே, கனிம வளம் ஏற்றி வந்த அதிவேக லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முழுமையாக நசுங்கியது. விபத்து நடந்த இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க் CCTV-யில் பதிவான காட்சிகளின்படி, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் குவாரி அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி