மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், நேற்று (மே 27) மாலை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சோழவந்தான் மந்தை திடலில் நடைபெற்றது. இதற்கு முன்னர் பால்குடம், அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன. பூ வளர்க்கும் பணிகளை சோழவந்தான் சங்கங்கோட்டை கிராமத்தினர் மேற்கொண்டனர். இந்த நிகழ்வின் போது தீயணைப்பு துறையினர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.