மதுரை ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல்

வைகை நதியை சீரமைக்க, நாள் ஒன்றுக்கு ரூ.15,000 பணம் கேட்டு மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் நேரில் சென்று பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். ஆதீனம் தரப்பில் பணம் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், மதுரை ஆதீனத்தை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இந்த மிரட்டல் தொடர்பாக போலீசிடம் புகார் அளிக்க விரும்பவில்லை என ஆதீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி