தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ

பருவநிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று தமிழகத்தில் பரவி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க கண் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது சாதாரண தொற்று தான் என்றாலும் ஆரம்ப நிலையிலே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். காலம் தாழ்த்தி அலட்சியம் செய்தால், பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்படும். கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்ணில் நீர் வடிதல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

தொடர்புடைய செய்தி