மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திமுக வேட்பாளர் பரந்தாமன் ஆகியோர் வரும் செப்டம்பர் 15 அன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். அதேபோல், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் செப்டம்பர் 16 அன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.