சொகுசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் சொகுசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி இன்று (டிச., 29) விபத்துகுள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதோடு, லேசான பனிமூட்டமும் காணப்பட்டது. எச்சரிக்கை பலகை வைக்காததால் விபத்து அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். விபத்தால் மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி