எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் 30 நாட்களுக்கு தேவையான எல்பிஜி எரிவாயுவை சேமித்து வைக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மீண்டும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அரசு, நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி இருப்பு போதுமான அளவு உள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி